ஆகஸ்ட் 2020-ல், உலகச் சுகாதாரச் சபை, கருப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிப்பதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதுடன், அதைச் செயல்படுத்துவதற்காக ஒரு திட்டத்தையும் பின்பற்றியது. நவம்பர் 17, 2020-ல், உலகச் சுகாதார அமைப்பு இந்த வரலாற்று அறிவிப்பை அங்கீகரித்ததோடு, அத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. அம்முன்னெடுப்பைக் குறிக்கும் ஒரு நாளாக, பல நிகழ்ச்சிகள் மற்றும் அறிமுக விழாக்கள் உலகெங்கிலும் நடைபெறும். கருப்பை வாய்ப் புற்றுநோயை, ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக எண்ணி, அதன் ஒழிப்பைத் துரிதப்படுத்த, சமூகங்கள் மற்றும் தனிநபர்களிடையே உலகளாவிய விழிப்புணர்வு இயக்கம் ஒன்று வளர்ந்து வருகிறது.

2019 மலேசியத் தேசியப் புற்றுநோய் பதிவேட்டின் தகவல்படி, மலேசியாவில் ஆண்டுக்கு, 700-க்கும் மேற்பட்ட, கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகள் புதிதாகக் கண்டறியப்படுகின்றன; மேலும், அவற்றில் 40 % 3-ம், 4-ம் நிலைகளிலேயேக் கண்டறியப்படுகின்றன.

`ரோஸ்` அறக்கட்டளை (ROSE – Removing Obstacles to cervical ScrEening), மலேசியத் தேசியப் புற்றுநோய் சங்கம் (NCSM – National Cancer Society Malaysia), தேசியப் புற்றுநோய் மன்றம் (MAKNA – Majlis Kanser Negara), ‘ஆல் வூமன் எக்‌ஷன் சொசைட்டி’ (AWAM) மற்றும் மகளிர் உதவி அமைப்பு (WAO- Women’s Aid Organization) ஆகியவற்றுடன் இணைந்து, மலேசியப் புற்றுநோயியல் சங்கம் (MOS – Malaysian Oncological Society), கருப்பை வாய் புற்றுநோய், பரிசோதனை மற்றும் HPV தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வை மலேசியப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்த, இரண்டு மாதச் சமூக ஊடகப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்து வருகிறது. இந்தப் பிரச்சாரத்தின் வெற்றி, நமது சமூக ஊடக ஆர்வலர்கள் இச்செய்திகளை, அவர்களைப் பின்பற்றுபவர்கள் இடையேத் தீவிரமாகப் பகிர்வதிலேயே உள்ளது.

மலேசியாவில், கருப்பை வாய்ப் புற்றுநோய், பெண்களிடையே மிகவும் பொதுவான, மூன்றாவது புற்றுநோயாகும், மேலும் இது வழக்கமான கருப்பை வாய் பரிசோதனை மற்றும் HPV தடுப்பூசிகளால் தடுக்கப்படுகிறது.

அரசு சாரா நிறுவனங்கள்

சமூக ஊடகச் செல்வாக்குமிக்கவர்

Choo Mei Sze

Youth Ambassador for National Cancer Society Malaysia/ Emcee/Host

Shubasini Rajkumar

Miss Malaysia Petite Spokesperson Malaysia 2017

Dr Imelda Balchin

Obstetrician & Gynaecologist Consultant, KPJ Damansara Specialist Hospital

Pritha Manivannan

Actress, News Anchor, Tv Personality, Producer

Francisca Luhong James

Miss Universe Malaysia 2020

Julie Woon

Emcee/Host

Goh Liu Ying

Malaysia Badminton Player

ஒப்புதல்

பட வடிவமைப்பாளர்
Ong Jou Ee

மொழிப்பெயர்ப்பாளர்
Bahasa Malaysia:
வாரம் 1-3
Rizq Herinza Syadza binti Sofian
வாரம் 4 – 9
Kanakambigai Narayanasamy

மொழிப்பெயர்ப்பாளர்
Mandarin:
Chin Sze Yuin

மொழிப்பெயர்ப்பாளர்
Tamil:
Santha Letchmy Perumal

எங்களின் 3 முக்கியச் செய்திகள்

கருப்பை வாய்ப் புற்றுநோய் மனிதப் பாப்பிலோமா கிருமியின் (HPV) காரணமாக ஏற்படுகிறது – வாரம் 1

பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும்போது, நம்பமுடியாத பல விஷயங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது.
கருப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து உங்கள் அன்புக்குரியவர்களையும் உங்களையும் எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிய உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா அல்லது மறுப்பீர்களா?

2020 டிசம்பர் 1 முதல் 2021 ஜனவரி 31 வரையில், கருப்பை வாய்ப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பயணத்தில் எங்களோடு இணையுங்கள், @malaysianoncologicalsociety என்ற முகநூல் (Fb) & படவரியில் (Insta) எங்களைப் பின்தொடருங்கள்.

தொடர்புடைய வலைத்தளம்
http://www.myhealth.gov.my/en/cervix-cancer/

Conquering Cancer: Fighting Cervical Cancer – Chris' Story

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கர்ப்பப்பை வாய் திசுக்கள் அல்லது உயிரணுக்களில் உருவாகும் புற்றுநோயாகும். கருப்பை வாய் என்பது கருப்பையின் கீழ்ப் பகுதி (கருப்பை) யோனியுடன் இணைகிறது.

பெரும்பாலான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களில் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆதாரங்கள்:

 1. https://www.cancer.org/cancer/cervical-cancer/about/what-is-cervical-cancer.html
 2. https://www.mayoclinic.org/diseases-conditions/cervical-cancer/symptoms-causes/syc-20352501

HPV and Cancer

கருப்பை வாய்ப் புற்றுநோயின் ஆரம்பக் கட்டங்களில் எந்தவொரு அடையாளமும் அறிகுறியும் இருக்காது. கருப்பை வாய்ப் புற்றுநோயின் பொதுவான அடையாளங்கள் மற்றும்

அறிகுறிகள்:

 1. உடலுறவுக்குப் பிறகு, மாதவிடாய் காலங்களில் அல்லது மாதவிடாய் நின்ற பிறகு யோனியில் இருந்து இரத்தப்போக்கு.
 2. அதிகமான & துர்நாற்றம் வீசக்கூடிய நீர், இரத்தம் கலந்த வெள்ளை யோனியில் இருந்து வெளியேறுதல்.
 3. உடலுறவின் போது இடுப்பு வலி அல்லது வலி.

இந்த அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் உங்களிடம் இருந்தால், உடனடியாக உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஒரு பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.

ஆதாரங்கள்:

 1. https://www.cancer.org/cancer/cervical-cancer/detection-diagnosis-staging/signs-symptoms.html
 2. https://www.mayoclinic.org/diseases-conditions/cervical-cancer/symptoms-causes/syc-20352501

What are the signs and symptoms of cervical cancer?

கருப்பை வாய்ப் புற்றுநோய் மனிதப் பாப்பிலோமா கிருமியின் (HPV) காரணமாக ஏற்படுகிறது – வாரம் 2

மலேசியப் பெண்கள் இடையே, கருப்பை வாய்ப் புற்றுநோய் என்பது 3-வது மிகவும் பொதுவான புற்றுநோயாகும்.

மனிதப் பாப்பிலோமா கிருமி (HPV) தொற்றால் பாதிக்கப்படும் 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்குக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகம்.

ஆதாரங்கள்:

 1. https://www.programrose.org/cervical-cancer-hpv
 2. https://www.cancer.org/cancer/cervical-cancer/causes-risks-prevention/risk-factors.html

கருப்பை வாய்ப் புற்றுநோய், முதல் கட்ட நிலையில் இருக்கும்போது, அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2, 3 மற்றும் 4-ஆம் நிலைப் புற்றுநோய்களுக்குப் பொதுவாக ‘கீமோதெரபி’ மற்றும் கதிரியக்க முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

ஆதாரங்கள்:

 1. https://www.cancer.org/cancer/cervical-cancer/treating/by-stage.html
 2. https://www.cancer.gov/types/cervical/patient/cervical-treatment-pdq

முன்கூட்டியே அல்லது ஆரம்பக் கட்டத்திலேயே, கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டால், உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் 100%-க்கு அருகில் உள்ளது. 1, 2, மற்றும் 3-ம் கட்டக் கருப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பச் சிகிச்சையால் குணப்படுத்த முடியும்.

ஆதாரங்கள்:

 1. https://www.cancer.org/cancer/cervical-cancer/detection-diagnosis-staging/survival.html

கருப்பை வாய்ப் புற்றுநோய் மனிதப் பாப்பிலோமா கிருமியின் (HPV) காரணமாக ஏற்படுகிறது – வாரம் 3

மனிதப் பாப்பிலோமா கிருமி (HPV) என்பது இனப்பெருக்கக் குழாயில் மிகவும் பொதுவான கிருமி தொற்று ஆகும். 100-க்கும் மேற்பட்ட வகையான HPV-க்கள் உள்ளன, ஆனால் 14 வகைகள் மட்டுமே புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. 95%-க்கும் அதிகமான கருப்பை வாய்ப் புற்றுநோய், இந்த HPV வகை கிருமியின் தொடர் தொற்றால் ஏற்படுகிறது.

ஆதாரங்கள்:

 1. https://www.programrose.org/cervical-cancer-hpv
 2. https://www.healthline.com/health/human-papillomavirus-infection#_noHeaderPrefixedContent

மனிதப் பாப்பிலோமா கிருமி (HPV) பொதுவாக உடலுறவின் போது பிறப்புறுப்பு தோல் வழியாகப் பரவுகிறது. பெரும்பாலான HPV நோய்த்தொற்றுகள் முதல் 2 ஆண்டுகளில் மறைந்துவிடும், ஆனால் சிலருக்கு (HPV தடுப்பூசி போடாதவர்களுக்கு), அக்கிருமி உடலிலேயே நீண்ட காலம் தங்கிவிடும். ஆரோக்கியமான கருப்பை உயிரணுக்களைப் புற்றுநோய் உயிரணுக்களாக மாற்ற 10 ஆண்டுகள் வரை ஆகும்.

ஆதாரங்கள்:

 1.  https://www.cancer.org/cancer/cervical-cancer/causes-risks-prevention/risk-factors.html
 2. https://www.cdc.gov/cancer/cervical/basic_info/risk_factors.htm

கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க HPV தடுப்பூசி மற்றும் வழக்கமான கருப்பைத் திரையிடல் இரண்டும் முக்கியமான முறைகள் ஆகும்.

ஆதாரங்கள்:

 1. https://www.cancer.org/cancer/cervical-cancer/treating/by-stage.html
 2. https://www.cdc.gov/hpv/parents/about-hpv.html

HPV தடுப்பூசியினால் கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கலாம் – வாரம் 4

HPV தடுப்பூசி, கருப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சாதாரண வகை HPV புதியத் தொற்றுகளைத் தடுக்கிறது. இது ஏற்கனவே உள்ள HPV நோய்த்தொற்றுகள் அல்லது நோய்களுக்கு சிகிச்சையளிக்காது.

ஆதாரம் :

  1. https://www.cancer.org/cancer/cancer-causes/infectious-agents/hpv/hpv-and-hpv-testing.html

இளமை பருவத்திலேயே HPV தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், அது தொடர்ச்சியாக இருப்பதும் அவசியம். இது சிறுவர், சிறுமியர் என இருபாலருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது:

 • 9-ல் இருந்து – 14 வயது வரையில் (2 ஊசிகள் : 1 ஊசி 6 மாதத்திற்குப் பிறகு)
 • 15-ல் இருந்து – 26 வயது வரையில் (3 ஊசிகள் : ஆரம்ப / இளமை பருவ HPV தடுப்பூசியின் செயல்திறனைப் பொருத்து.
 • 26 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், தடுப்பூசி குறித்து, மருத்துவர்களிடம் பேச அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆதாரம் :

 1. https://www.cancer.org/latest-news/acs-updates-hpv-vaccination-recommendations-to-start-at-age-9.html
 2. https://www.cancer.org/cancer/cancer-causes/infectious-agents/hpv/hpv-vaccines.html

மலேசியாவில், HPV தடுப்பூசிகள் 2006-ம் ஆண்டு முதல் கிடைக்கின்றன.

2010-ஆம் ஆண்டில், HPV தடுப்பூசி போடும் பள்ளி அடிப்படையிலான HPV நோய்த்தடுப்பு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது; அதன் பின்னர், மலேசியாவில் 13 வயது சிறுமியர் அனைவருக்கும் (இடைநிலைப் பள்ளியின் முதல் ஆண்டு) HPV தடுப்பூசி போடப்பட்டது.

ஆதாரம் :

 1. https://bmcpublichealth.biomedcentral.com/articles/10.1186/s12889-018-6316-6
 2. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6303856/

HPV தடுப்பூசியினால் கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கலாம் – வாரம் 5

உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம், HPV நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயேக் கண்டறிந்து அகற்ற, HPV தடுப்பூசி உதவுகிறது, இதனால் அக்கிருமி உடலில் நிலைத்திருக்காது.

HPV நோய்த்தொற்று தொடர்ந்து இருந்தால், கருப்பை வாயில் மாற்றங்களை ஏற்படுத்தி, புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

ஆதாரம் :

 1. https://www.cancer.org/cancer/cancer-causes/infectious-agents/hpv/hpv-vaccine-facts-and-fears.html

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான வழக்கமான பரிசோதனையைச் செய்ய வேண்டும்; ஏனெனில், கருப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் அனைத்து வகையான HPV கிருமிகளில் இருந்தும், இத்தடுப்பூசி ஒருவரைப் பாதுகாக்காது.

ஆதாரம் :

 1. https://www.cancer.org/cancer/cancer-causes/infectious-agents/hpv/hpv-vaccines.html

HPV தடுப்பூசி பாதுகாப்பானது, கருப்பை வாய்ப் புற்றுநோயின் எண்ணிக்கையை அது கணிசமாகக் குறைத்துள்ளது.

இந்தத் தடுப்பூசியின் சில பக்க விளைவுகள் – காய்ச்சல், சோர்வு, தலைவலி மற்றும் தடுப்பூசி போடப்பட்ட சருமம் சிவந்து போதல் அல்லது வீக்கம். ஆனால், மக்கள் விரைவாக குணமடைவார்கள்.

ஆதாரம் :

 1. https://www.cancer.org/cancer/cancer-causes/infectious-agents/hpv/hpv-vaccine-facts-and-fears.html

HPV தடுப்பூசியினால் கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கலாம் – வாரம் 6

மலேசியாவில், HPV தடுப்பூசிகள் பரவலாகக் கிடைக்கின்றன.

அருகில் உள்ள கிளினிக் அல்லது மருத்துவமனைக்குச் சென்று, உங்களுக்கான HPV தடுப்பூசியைப் பெற, இப்போதே ஒரு சந்திப்பை உறுதிசெய்யுங்கள்.

ஆதாரம் :

 1. https://itsyourlife.net.my/hpv-prevention/
 2. http://www.myhealth.gov.my/en/hpv-human-papillomavirus-vaccination/

கருப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும், பெரும்பாலான HPV வகை முக்கியத் தொற்றுகளை, இந்தத் தடுப்பூசி தடுக்கிறது.

குறைந்த அளவில் காணப்படும், பொதுவகை HPV கிருமிகள் காரணமாக ஏற்படும் கருப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய, வழக்கமான கருப்பை வாய்ப் பரிசோதனை, கட்டாயமாக அறிவுறுத்தப்படுகிறது.

ஆதாரம் :

 1. https://www.cancer.org/cancer/cervical-cancer/detection-diagnosis-staging/screening-tests.html
 2. https://www.cancer.org/cancer/cervical-cancer/detection-diagnosis-staging/screening-tests/hpv-test.html

இல்லை, HPV தடுப்பூசியால் புதியத் தொற்றை மட்டுமே தடுக்க முடியும்.

ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க இது பயன்பெறாது. எனவே, வழக்கமான கருப்பை வாய் பரிசோதனை அவசியம்.

ஆதாரம் :

 1. https://www.cancer.org/cancer/cancer-causes/infectious-agents/hpv/hpv-and-hpv-testing.html

வழக்கமானப் பரிசோதனைகள் மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய முடியும் – வாரம் 7

30-65 வயதுக்கு இடைப்பட்ட, உடலுறவில் ஈடுபட்ட பெண்கள், திருமணம் அல்லது மாதவிடாய் நிலையைப் பொருட்படுத்தாமல், கருப்பை வாய் பரிசோதனையைச் செய்ய வேண்டும்; மேலும், பரிந்துரைக்கப்பட்ட கருப்பை வாய் பரிசோதனை அட்டவணையைப் பின்பற்ற வேண்டும்.

ஆதாரங்கள் :

 1. https://www.who.int/activities/screening-for-cervical-cancer
 2. https://www.ogsm.org.my/docs/GUIDELINES%20FOR%20PRIMARY%20HPV%20TESTING%20FOR%20CERVICAL%20CANCER%20SCREENING%20IN%20MALAYSIA.pdf

கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அணுகுமுறையின் ஒரு பகுதியாக பரிசோதனைகள் உள்ளன.

அறிகுறிகள் இல்லாதப் பெண்களுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் கருப்பை வாய்ப் புற்றுநோய் பொதுவாக, கடைசி கட்டத்தை எட்டும்போது மட்டுமே அதன் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. பரிசோதனையின் போது ஓர் அசாதாரணத் தன்மை அல்லது ஆரம்ப கட்டப் புற்றுநோய் கண்டறியப்பட்டால், அதற்கு எளிதாக சிகிச்சையளிக்க முடியும்.

ஆதாரங்கள் :

 1. https://www.who.int/news-room/fact-sheets/detail/human-papillomavirus-(hpv)-an-cervical-cancer

தினமும் நீர் ஊற்றி, உரமிட்டு, பாதுகாக்கப்படும் ஒரு பூவைப் போலவே, நம் உடலுக்கும் மென்மையான, அன்பான கவனிப்பு தேவைப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு, எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் வளரக்கூடிய அசாதாரண உயிரணுக்களிலிருந்து கருப்பை வாய்ப் புற்றுநோய் உருவாகிறது. இந்த அசாதாரண உயிரணுக்கள் புற்றுநோயாக மாறுவதற்கு முன்னர், அவற்றைக் கண்டறிய முறையான இடைவெளியில் திரையிடல் செய்வது மிக அவசியம்

ஆதாரங்கள் :

 1. https://www.cdc.gov/cancer/cervical/basic_info/screening.htm
  Ministry of Health, 2003. Clinical Practice Guidelines – Management of Cervical Cancer
 2. https://cebp.aacrjournals.org/content/early/2020/11/24/1055-9965.EPI-20-1177
 3. WHO guidelines for screening and treatment of precancerous lesions for cervical cancer prevention

வழக்கமானப் பரிசோதனைகள் மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய முடியும் – வாரம் 8

தகுதி வரம்புகளை அடைந்தவுடன், உங்களுக்கு வசதியாக இருக்கும் ஒரு பரிசோதனையை நீங்கள் செய்ய வேண்டும்.

கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும் இரண்டு பரிசோதனைகள் `பேப்ஸ்மியர்` மற்றும் HPV சோதனைகள் ஆகும். உடலுறவில் ஈடுபட்டுள்ள 21 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, அசாதாரண உயிரணு மாற்றங்களைக் கண்டறிய பேப் ஸ்மியர் சோதனை உதவும், இது ஒரு சுகாதார நிபுணரால் நடத்தப்படுகிறது; அதேசமயம், HPV சோதனை அசாதாரண உயிரணு மாற்றங்களுக்குக் காரணமான HPV புற்றுநோய் வகைகளைக் கண்டறிய உதவுகிறது.

90%-க்கும் அதிகமான உணர்திறன் கொண்ட HPV பரிசோதனை (பேப்ஸ்மியர் 50% ஆகும்), 30 முதல் 65 வயதுடைய பெண்களுக்கு, அவர்களின் திருமணம் அல்லது மாதவிடாய் நிலையைப் பொருட்படுத்தாமல் பரிந்துரைக்கப்படுகிறது, இப்பரிசோதனையை நோயாளிகள் தாமாகவே செய்ய முடியும்.

ஆதாரங்கள் :

 1. LAYOUT HPV_Layout 1
 2. https://www.cancer.org/cancer/cervical-cancer/detection-diagnosis-staging/screening-tests/pap-test.html
 3. https://www.cancer.org/cancer/cervical-cancer/detection-diagnosis-staging/screening-tests/hpv-test.html

ஆம், நீங்கள் தேர்வு செய்யலாம்.

HPV சோதனை மிகவும் உணர்திறன் வாய்ந்த கருப்பை வாய் பரிசோதனை, இதில் உங்களுக்கு எதிர்மறையான முடிவு வந்தது என்றால், அடுத்த 5-10 வருடங்களுக்கு நீங்கள் கருப்பை வாய் பரிசோதனையைச் செய்ய வேண்டிய அவசியமில்லை (நீங்கள் 30 முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால்).

ஆதாரங்கள் :

 1. https://www.programrose.org/frequently-asked-questions

பேப்ஸ்மியர்: முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, தொடர்ச்சியாக சோதனை முடிவுகள் சாதாரணமாக இருந்தால், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யவும்.

HPV சோதனை : உங்களுக்கு எதிர்மறையான சோதனை முடிவு கிடைத்தால், 5-10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் செய்யவும்.

*10 வருட காலத்திற்குள், சாதாரண முடிவைக் கொண்ட ஒரு நோயாளி 2 HPV சோதனைகள் அல்லது 4 பேப்ஸ்மியர்கள் எடுக்கலாம்.

ஆதாரங்கள் :

 1. https://www.programrose.org

வழக்கமானப் பரிசோதனைகள் மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய முடியும் – வாரம் 9

கீழ்க்கண்ட வகையில் நீங்கள் இருந்தால், HPV பரிசோதனை செய்துகொள்ளலாம்

 • நீங்கள் 30 முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால்
 • நீங்கள் கர்ப்பமாக இல்லை என்றால்
 • உங்கள் கருப்பை அகற்றப்படவில்லை என்றால்
 • பரிசோதனை நாளில், மாதவிடாய் இரத்தப்போக்கு அதிகமாக இல்லை என்றால்

ஆதாரங்கள் :

 1. https://www.programrose.org

வலியற்ற, எளிய மற்றும் விரைவான HPV பரிசோதனையை ஒரு சுகாதார அமைப்பு முறையில், ஒரு குளியலறையில் அல்லது கழிப்பறையில் நீங்களாகவே செய்யலாம். ஒரு `ஸ்வேப்` தொகுப்பு (துணியால் ஆன தொகுப்பு) உங்களுக்கு வழங்கப்படும்.

A package that consists of a swab will be given to you.

 1. உங்கள் பெண்ணுறுப்பில் மெதுவாக `ஸ்வேப்`-ஐ செருக வேண்டும் (ஒரு `டம்பன்`-ஐ செருகுவதைப் போன்றது).
 2. பின்னர், `ஸ்வேப்`-ஐ 5-10 முறை சுழற்றுங்கள்.
 3. முடிந்ததும், `ஸ்வேப்`-ஐ அகற்றி, அதைச் சுத்தம் செய்யாமல், கீழே போடாமல், கொடுக்கப்பட்ட டியூப்பில் மீண்டும் வைக்கவும்.

HPV பரிசோதனைக்குப் பிறகு, நீங்கள் எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி உங்கள் நாளைக் கழிக்கலாம். அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு இல்லாத காலகட்டத்தில், எந்நேரத்திலும் HPV பரிசோதனையை நீங்கள் செய்யலாம்.

ஆதாரங்கள் :

 1. http://www.cancerscreening.gov.au/internet/screening/publishing.nsf/Content/A2059EFF3C101C6ACA2581C300161E96/$File/CAN177%20-%20Instruction%20guide%20for%20self-collect%20(How%20to%20take%20your%20own%20sample%20for%20a%20HPV%20test)%20V2.pdf

கருப்பை வாய் HPV பரிசோதனையில், எதிர்மறை முடிவு என்றால்

 • மாதிரியில் HPV கண்டறியப்படவில்லை (எல்லாம் இயல்பாக உள்ளது).
 • கருப்பை வாயில் அசாதாரண உயிரணு மாற்றங்கள் உருவாகும் ஆபத்து மிகக் குறைவு என்பதை இது குறிக்கிறது. அடுத்த கருப்பை வாய் HPV சோதனையை, 5-10 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் செய்யலாம்.

கருப்பை வாய் HPV பரிசோதனையில், நே ர்மறை முடிவு என்றால்

 • உங்கள் மாதிரியில் HPV நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
 • இதனால் உங்களுக்குக் கருப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமல்ல. உங்கள் கருப்பை வாயில் அசாதாரண செல் மாற்றங்கள் உடனடியாக இல்லை என்பதை உறுதிப்படுத்த, தொடர் சோதனைகள் தேவை.